Thursday, June 14, 2018

கீழ் இடுப்புப்பகுதில வலி இருக்க??அப்போ இந்த வேலையெல்லாம் கொஞ்சநாளைக்கு செய்யாதீங்க

இன்றைய காலகட்டத்தில் வேலை பார்க்கும் ஆண்களும் பெண்களும் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சினைதான் கீழ் இடுப்பு வலி.இந்த வலி ஏற்பட்ட பிறகு என்னென்ன விஷயங்கள் எல்லாம் செய்யக்கூடாது என்பது அவர்கள் தெரியாமல் இருப்பதுதான் இந்த வலி மீண்டும் மீண்டும் அதிகரிக்க காரணம்.





நீங்கள் வலியைக்குறைக்க கடைபிடிக்கவேண்டிய மட்டும் தவிர்க்கவேண்டிய செயல்கள்
  1. வலியை குறைக்க போகிறேன் என்று கூறி நடப்பது,நிற்பது,உக்காந்து இருப்பது,ஓடுவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது அதற்கு பதிலாக நன்றாக காலை நீட்டி படுத்து ஓய்வெடுக்க வேண்டும்.
  2. நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்பவராக இருந்தாலும் கூட வலி இருக்கும் சமயத்தில் உடற்பயிற்சியை தவிர்ப்பது நல்லது
  3. கீழ் இடுப்புப்பகுதியில் விரைவாக வலியை குறைக்கும் நிவாரணிகள் மற்றும் மருந்து மாத்திரைகளும் எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது 
  4. நீங்களாகவே சுய சிகிச்சை அளிப்பது தவறு யாரையாவது மசாஜ் செய்யச் சொல்வதும் தவறு
  5. மீண்டும் மீண்டும் குனிந்து குனிந்து பண்ணக்கூடிய வேலை செய்ய வேண்டாம் இது இடுப்பில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி வலியை அதிகரிக்கும்
  6. ஓய்வெடுத்து ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு வலி குறையவில்லை என்றால் உடனடியாக மருத்துவரை காண்பதே சிறந்த செயலாகும்





Subscribe to get more videos :